பாரதியின் சுயசரிதையிலிருந்து ஒரு கவிதை என்னை இதை எழுத வைத்தது. இது வளையத்தில் எனது முதல் தமிழ் படைப்பு!

தகப்பர்கள் தினத்தை (இது சரியான தமிழாக்கமா? :) ) முன்னிட்டு என் மிக நெருங்கிய நன்பர்கள் சிலருக்கு இந்த லிங்க்கை அனுப்பி இருந்தேன்: http://in.yfittopostblog.com/2010/06/21/my-fathers-son/

இதை படித்த என் நன்பன் அர்விந் ராஜேஷ் பதிலுக்கு பாரதியின் சுய சரிதையில் தனது தந்தையின் பிரிவை பற்றி எழுதி இருந்ததையும், சுஜாதா பாரியின் மகளிரின் கையறு நிலை குறித்த “அற்றை திங்கள்…” பாடலை ஹைக்கூ எனக்குறிப்பிட்டதையும் மேற்காட்டி மின் அஞ்சல் எழுதி இருந்தான். பாரதியின் ஒவ்வொரு வரிக்கும் நான் ஒரு பதிவு எழுதலாம்!

மிகச்சமீப காலத்தில் ஒஷொ விவரித்த “agony” எனக்கும் வந்தது. லிங்க் கிடைக்காததால் படித்ததை விவரிக்கிறேன்: ஒரு குருட்டு நாடொடி இருக்கிறான். தினமும் நடக்க உதவியாக கைத்தடி ஒன்று வைத்து கொள்கிறான். ஒரு நாள் இரவு அவன் தூங்கும்போது கைத்தடி உருண்டு திண்ணையிலிருந்து விழுந்து விடுகிறது. அதே இடத்தில் ஒரு பாம்பு தடி போன்று நீண்ட நிலையில் பனிக்கால இரவில் விரைத்து விடுகிறது. காலையில் எழுந்தவன் பாம்பை தடியாக எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். இதை பார்த்த வயொதிகர் ஒருவர் குருடனிடம் “நீ கொண்டிருப்பது தடி அல்ல பாம்பு” என்கிறார். தனக்கு பாதகம் செய்ய எண்ணுகிறாரோ என்றும் இயல்பால் தனக்குள்ள பிற குழப்பங்களாலும் தான் தடி என்றென்னும் பாம்பை தூக்கியெரிய மறுக்கிறான் குருடன். இறுதியில் பாம்பு கடித்து மடிகிறான். தன் பேச்சை கேட்காமல் குருடன் பாம்பை கைப்பிடித்து சென்றபோது வயோதிகருக்கு ஏற்படும் உணர்வை வேதனை என்கிறார். தனக்கும் பல சமயம் இது நடந்ததுண்டு என்கிறார்.

சில நாட்கள் முன்பு என் மிக நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு சொத்து பிரச்சினை. ஒவ்வொரு சராசரி இந்தியனும் சந்திப்பது – சாமானியரில் இருந்து அம்பானிகள் வரை ;). இதை எனது உறவினர் நால்வர் படித்தால் மூவர் “நம்ம பத்தி தான்யா எழுதிருக்கான்” என்றெண்ணும் அளவுக்கு common! ஆனால் இந்த சொத்து பிரச்சினை வரை கடந்து சென்று விட்டது. வயதான தந்தையிடம் மல்லுக்கு நிக்கும் மகனது வாரிசின் படிப்பு நின்று போய்விட்டது. மகன்காரரிடம் என்னால் முடிந்தமட்டும் பேசிப்பர்த்தேன். தந்தை தரப்பிலும் பேசினேன். விலலுக்கு இறைத்த நீராயிற்று. Futility of my endeavors was hitting me! வேதனை. எனக்குதான் சரியா பேச தெரியலையோ?

சுய சரிதையின் முடிவுரையில் பாரதி எழுதுகிறார்:

“போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்”.

அவர் அன்னையை கூப்பிட்டு “ஆன தாவ தனைத்தையுஞ் செய்வதோர் அன்னையே” தீர்வு சொல்கிறார். இதை விடுவித்து ஆத்திகமாய் பார்த்தாலும் நாத்திகமாய் பார்த்தாலும், the point is: “எவ்வளவு தான் திடமான தூண்டில் போட்டாலும் வானத்து மீன் சிக்காது”. முன்னால் காதலி, வார்த்தை கேளாத குருடன் போன்ற எந்த வானத்து மீனினாலும் வேதனை வேண்டாம். ஏனெனில் “பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!”

நம்மில் பலர் பல விதமான வானத்து மீன்களுக்கு தூண்டில் வீசிக்கொண்டு இருக்கிறோம். கேளுங்கள்: “எனது “வானத்து மீன்(கள்)” எவை?”

Thanks to: RR (Rohit) for initiating yfittoblog; Arvindh for Bharathi kavithaigal; Bharathi!!!

Advertisements